ராமேசுவரத்தில் நள்ளிரவில் தோன்றிய சூப்பர் நிலா

By எஸ்.முஹம்மது ராஃபி

68 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய சூப்பர் நிலாவை ராமேசுவரம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.

நிலா பூமிக்கு அருகில் வரும் நாள்தான் சூப்பர் நிலவு என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியுள்ளது. 68 ஆண்டுகளுக்கு பிறகு திங்கட்கிழமை வானில் சூப்பர் நிலவு தோன்றும், இந்த நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடன் காணப்படும்.

பூமிக்கு 221, 523 மைல்கள் தொலைவில் நிலா வருவதால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நிலாவாக இருக்கும். சனிக்கிழமை சூப்பர் நிலாவை பார்க்கத் தவறினால், 25.11.2034 அன்று தான் இது போன்ற இதுபோன்ற 'சூப்பர் நிலா' தோன்றும் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலில் இருந்தும் மக்கள் வெறும் கண்களாலேயே இதை பார்த்து ரசித்தனர். சுற்றுலாத் தலமான ராமேசுவரத்தில் திங்கட்கிழமை மாலை மேகமூட்டமாக இருந்ததால் இரவு 10 மணிக்கு மேல் பௌர்ணமி நிலா தலைகாட்டத் துவங்கியது.

நள்ளிரவில் பிரகாசமாகத் தென்பட்ட சூப்பர் நிலா வழக்கத்தை விட பெரிய அளவில் தெரிந்தது. இதனை கடற்கரையில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்