சென்னை: தவறே செய்யாமல் சிறையில் கொடுமைகளை அனுபவித்தேன் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்துவிடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது: ஏழு பேர் விடுதலைவழக்கு உயிர்ப்புடன் இருந்ததற்குஊடகங்கள்தான் காரணம். அதற்காக அனைத்து ஊடகத்தினருக்கும், 7 பேர் விடுதலை கோரி தீர்மானம் நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும், என்னை பரோலில் அனுப்பி, எங்கள் விடுதலைக்கு தொடர் முயற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் விடுதலையானாலும் என் கணவர் முருகன் என்னுடன் இல்லை. அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவர் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்த்து, அவரை எனது மகளிடம் அனுப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைதான நாளில் இருந்து வெளியில் வர போராடிக்கொண்டிருந்தேன். எனது வழக்கறிஞர்கள்தான் எனக்கு நம்பிக்கை அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் பரோலில் விட்ட பிறகுதான் என்னால் வழக்கை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. அவரை சந்தித்து நன்றி தெரிவிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் பேரறிவாளன் முதல்வரைசந்தித்தது விமர்சனத்துக்குள்ளா னது போல, என்னால் முதல்வருக்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என கருதுகிறேன். பிரியங்கா காந்தி விரும்பினால்,நான் அவரை சந்திக்க தயாராகஇருக்கிறேன். அவர் என்னை சிறையில் சந்தித்தபோது, அவரது தந்தை மரணம் தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது அவரது மனதில் தன் தந்தை இறப்பின் காயம் ஆறாமல் இருந்தது.
ராஜீவ் மரணம் ஏற்க முடியாதது: குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சம்பவ இடத்துக்கு நான் சென்றேன் என்பதால் இவ்வளவு தண்டனைகளை அனுபவித்தேன். ராஜீவ் காந்தி மரணம் ஏற்க முடியாதது. அந்த சம்பவத்துக்கு நான் வருந்துகிறேன். அங்கு அந்த சம்பவம் நடக்கும் என எனக்கு நிச்சயமாக தெரியாது. அந்த சமயத்தில் இரு மாத கர்ப்பமாக இருந்தேன். 32 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் என் மீது எந்த வழக்கும்இல்லை. சிறையில் இருக்கும்போது 6 ஆண்டுகள் எம்சிஏ வரை படித்தேன். படித்த காலத்தில்தான் எனது மனம் ரிலாக்ஸாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
நளினியின் வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் கூறும்போது, "ஆளுநர் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட் டுள்ளது. அதையும் மதிக்காமல்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் முடிவையும் மதிக்காமல் இருந்ததால், இவர்கள் கடந்த9 ஆண்டுகளாக சிறையில்அடைபட்டு சட்டப்போராட்டங் களை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கில் தாமதித்த ஆளுநர் மீதுநடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லாத நிலையில், மாநில அரசின் அதிகாரம், நீதிமன்றத்தின் அதிகாரம் ஆகியவை அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட் டுள்ளனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago