கோவை கார் வெடிப்பு: 6 பேரை காவலில் எடுக்க என்ஐஏ திட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை முகமது தல்கா, அசாருதீன், நவாஸ் இஸ்மாயில், ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்