சொகுசு வசதிகளுடன் 7 நட்சத்திர விருது பெற்ற மஹாராஜா சுற்றுலா ரயிலை தென் மாநிலங்களில் இயக்க திட்டம்

By கி.ஜெயப்பிரகாஷ்

சொகுசு வசதிகளுடன் 7 நட்சத்திர விருது பெற்ற மஹாராஜா சுற்றுலா ரயில் முதல்முறையாக அடுத்த ஆண்டு முதல் தென் மாநிலங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இயக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் 2010-ல் மேற்கு இந்திய சுற்றுலாவுக்கு என மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் ஒவ்வொருவருக்கும் உலகத் தரத்திலான சொகுசு அறை, தனித்தனியாக கழிப்பறை கள், எல்இடி டிவி, வை-பை வசதிகளுடன் 5 நட்சத்திர ஓட்டல் களுக்கு இணையான அனுபவம் கிடைக்கும்.

இந்த ரயிலில் பயணம் செய்பவர் களை முக்கிய விருந்தாளிகள் என்றே அழைக்கின்றனர். மும்பை, அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், ஜெய்ப்பூர், ஆக்ரா, டெல்லி ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு இந்த சொகுசு ரயில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரையில் இயக்கப்பட்டு வருகிறது.

விருந்தினர்களின் தேவைக்கு ஏற்ப கொழுப்பு இல்லாத உணவு கள், ஜெயின் உணவுகள், மன்னர் கால சைவ, அசைவ உணவுகள், வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படும். ராஜா கிளப் என்றொரு தனிப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. உணவு, மன்னர்கள் காலத்து உபசரிப்பு முறை, அரண்மனை போன்ற ரயில் பெட்டிகளின் உள் அலங்கார வடிவமைப்பு போன்றவை பயணி களைப் பழைய காலத்துக்கே கொண்டுசெல்லும். டீலக்ஸ் கேபின், ஜூனியர் சூட்ஸ் என வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சுற்றுலா ரயில் உலகின் மிக சொகுசான சுற்றுலா விருதை 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் பெற்றுள்ளது. ஐரோப்பாவின் ஓரியன்ட் சொகுசு ரயிலுக்கு இணையாக இந்த ரயில் பயணம் இருக்கும். கடந்த ஆண்டு இந்த சொகுசு ரயிலுக்கு 7 நட்சத்திர விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு ரயில் தென்னிந்திய மாநிலங்களுக்கு எப்போது வரும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

அடுத்த ஆண்டு முதல்...

இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. குறிப்பாக பாரத் தர்ஷன் ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்வி சுற்றுலா உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறோம். இந்தியாவின் அதிநவீன வசதி கொண்ட மஹாராஜா சொகுசு ரயில் தற்

போது வட மாநிலங்களில் இயக்கப் பட்டு வருகிறது. இவற்றில் பெரும் பாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) 80 சதவீதம் அளவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், சிதம்பரம், கோயம்புத்தூர், ஐதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளும் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இருக்கின்றன. எனவே, தென் மாநிலங்களில் இருக்கும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் மஹாராஜா சுற்றுலா ரயிலை இயக்க மத்திய அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளோம். இதற்கிடையே, குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்கள் தேர்வு செய்யப்பட்டு நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒரு பகுதி பணியை சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2017) செப்டம்பர் முதல் தென் மாநிலங் களை இணைக்கும் வகையில் மஹாராஜா சுற்றுலா ரயிலை இயக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்