பொதுமக்களுக்கு 2.5 லட்சம் கொசு வலைகள்: சென்னை மேயர் ஆர்.பிரியா தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மழை பெய்துவரும் நிலையில், கொசுக்கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக அவர்களுக்கு வழங்க இரண்டரை லட்சம் கொசு வலைகள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணி மற்றும் தூய்மைப் பணிகளையும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:

சென்னையில் பருவமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களை கொசுக்கடியில் இருந்துபாதுகாக்கும் விதமாக அவர்களுக்கு கொசு வலை வழங்கப்பட்டு வருகிறது. திரு.வி.க. மண்டலத்திலும் கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலையோரம், நீர்நிலைகளின் அருகில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை கண்டறிந்து கொசு வலை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இரண்டரை லட்சம் கொசு வலைகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்