தென் கிழக்கு வங்கக்கடலில் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் 

By செய்திப்பிரிவு

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (நவ.12) தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவ.13) தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்பிறகு 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE