திருப்பத்தூர் | அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (53). இவரது மனைவி கன்னிகாபரமேஸ்வரி (50). இவர், திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் உள்ள ஊர்புற நூலகத்தில் நூலகராக பணியாற்றி வந்தார். முரளி நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, அரிசி அரவை மில் (ரைஸ்மில்) நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கன்னிகா பரமேஸ்வரி நேற்று காலை ஆலையில் தானியங்களை அரைத்த போது கன்னிகா பரமேஸ்வரி அணிந்திருந்த துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட கன்னிகா பரமேஸ்வரி அங்குள்ள இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்