சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடத்தில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் தரமணியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை இன்று நீடிப்பதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (நவ.10) காலை 8.30 மணி முதல் இன்று (நவ.11) காலை 8.30 மணி வரை மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் 10 செ.மீ, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 9 செ.மீ, கடலூர், வேளாங்கன்னி, சீர்காழியில் தலா 8 செ.மீ, சென்னை தரமணி, திருவள்ளூர் மாவட்டம் பென்னோரி, புதுச்சேரி, சென்னை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் சராசரியாக 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதில் திரு.வி.க. நகரில் 9 செ.மீ, மீனம்பாக்கத்த்தில் 8 செ,மீ, அண்ணா நகரில் 8 செ.மீ, கொளத்தூரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago