புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளை முழுவீச்சில் ஒருங்கிணைக்க அமமுகவினருக்கு டிடிவி வேண்டுகோள் 

By செய்திப்பிரிவு

சென்னை: "தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிற வழிகாட்டுதலின்படி செயல்படுத்திடவேண்டும்" என்று அமமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கழகத்தினர் தாமதமின்றி பெற்று, அதனை வாக்குச்சாவடி வாரியாக சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிற வழிகாட்டுதலின்படி செயல்படுத்திடவேண்டும். இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பினை சரியாகவும், அக்கறையோடும் பயன்படுத்திக்கொண்டு அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு உள்ளிட்ட கழக பகுதிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.மிக முக்கியமான இந்தப் பணியை அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட கழக செயலாளர்கள் முழு வீச்சில் ஒருங்கிணைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்