தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மருத்துவமனை கட்டி, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோ ருக்கு கடந்த 26 ஆண்டுகளாக மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப் பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஆண்டிபட்டி- பாலக்கோம்பை சாலையில் ‘ஆரோக்கிய அகம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவ னம் சார்பில் மருத்துவமனை கட்டப் பட்டுள்ளது. இதில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் அப்பகுதியிலேயே தங்கி சிகிச்சை அளிக்க குடியிருப்புகளும் கட்டப் பட்டுள்ளன. எச்.ஐ.வி.யின் தீவிர தாக்குதலுக்கு ஆளானோர், இந்த மருத்துவமனைக்கு வந்து இலவச மாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுகுறித்து ஆரோக்கிய அகம் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எம்.சைமன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு களில் தொழுநோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த காலக் கட்டத்தில் ஆண்டிபட்டி அருகே ராஜதானி என்ற கிராமத்தில், சேவா நிலையம் என்ற அமைப்பு சார்பில் தொழுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சேவா நிலையத்துக்கு ரஷ்யாவில் வசிக்கும் ஜான் டால்டன் என்பவர் பட்டப்படிப்பு தொடர்பாக தன்னார் வலராக வந்து சேர்ந்தார்.
தொழுநோயாளிகளுக்கு பணி செய்து வந்த ஜான் டால்டன், 1982-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஆரோக்கிய அகத்தை கட்டி தொழுநோய் சிகிச்சை பிரிவு மையத்தை தொடங்கினார். இதற் கிடையே, 1990-ம் ஆண்டு மத்தியில் தேனி மாவட்டத்தில் எச்.ஐ.வி. வேகமாக பரவியது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரை தொடு வதற்கே பலர் அஞ்சி வெறுத்து ஒதுக்கினர். இதனால் வேதனைய டைந்த ஜான் டால்டன் தனது சொந்த பணத்தையும், அவரது நண்பர்களிடம் திரட்டிய நிதியையும் கொண்டு, எச்.ஐ.வியால் பாதிக்கப் பட்டோருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.
மேலும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப் பட்டோர் கூட்டமைப்பை 1997-ம் ஆண்டில் உருவாக்கினார். இந்த அமைப்பினர் மாநில எய்ட்ஸ் கட்டுப் பாட்டுச் சங்கத்துடன் இணைந்து எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோ ருக்கு அரசு வழங்கும் நிதி, குழந் தைகளின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு குறித்தும் பொதுமக்களி டம் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர் வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனைப் பார்த்து, மற்ற மாவட்டங்களிலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
ஏ.ஆர்.டி மையம் மூலம் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ளாமல் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், காசநோயால் பாதிக்கப்படுகின்ற னர். அவர்களை எங்களது மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, அவர்களுடன் வரும் உறவினர்களுக்கும் இலவசமாக உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கி சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்புகிறோம்.
எம்.சைமன்
இதுபற்றி தகவல் அறிந்த வெளி மாவட்டத்தினரும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். நோயின் தாக்கம் அதிகரித்து, சில நேரங்களில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் உயிரிழக்கின்றனர். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என் பதை வெளியில் சொல்ல அவமானப்பட்டு உறவினர்கள் சிலர், அவர்களின் உடலை வாங்க மறுத்துவிடுகின்றனர். அப்போது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பினருடன் சேர்ந்து இறந்தவர்களின் குல வழக்கப் படி இறுதி காரியங்களை செய்கி றோம். இதுவரை 20-க்கும் மேற்பட்ட வர்களின் உடல்களை நாங்கள் தகனம் செய்துள்ளோம் என்றார்.
எச்.ஐ.வி. தாக்கம் குறைப்பு
தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சைமன் மேலும் கூறும்போது, “தமிழகத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு தேனி மாவட்டம் 3-வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது 13-வது இடத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் எச்.ஐ.வியால் 10,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரம் பேர் மட்டுமே ஏ.ஆர்.டி. மையத்தில் பதிவுசெய்து மருந்து, மாத்திரை எடுத்து வருகின்றனர். மற்றவர்களை தேடி கண்டுபிடித்து சிகிச்சை பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களை கண்காணிக்கும் திட்டத்தை தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, கோவை, நெல்லை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறோம். ரஷ்ய நாட்டு பிரஜையான 66 வயது ஜான் டால்டன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கடந்த 26 ஆண்டுகளாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சேவை ஆற்றி வருவதோடு, ஆண்டுதோறும் அவ்வப்போது ஆரோக்கிய அகத்துக்கு வந்து எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago