திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு, பாஜக மாவட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில், நவ.11-ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
அவரை வரவேற்க கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சின்னாளபட்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பேசினார். பின்னர் காந்திகிராம பல்கலைக்கழகத் தில் நடைபெறும் விழா ஏற்பாடு களை பாஜக நிர்வாகிகள் பார்வையிட்டனர். பின்னர் ராம.சீனிவாசன் கூறியதாவது:
நவ.11-ல் பிரதமர் திண்டுக்கல் வருகிறார். இம்மாவட்டத்துக்கு பிரதமர் வருவது இதுவே முதல்முறை. நவ.11 பிற்பகல் 2 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடக்கும். மாலை 4.30 மணிக்கு மேல் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து பிரதமர் டெல்லி செல்வது உத்தேச திட்டம். இதுகுறித்து முழு விவரம் நாளை தெரியவரும். பிரதமரை வரவேற்பதில் பாஜகவினர் உற்சாகமாக உள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago