குன்னூர்: டேன்டீ தேயிலை தோட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்றக்கூடாது என்று, தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக டேன்டீ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நீலகிரி மாவட்டத்திலும், கோவை மாவட்டம் வால்பாறையிலும் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். டேன்டீ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குன்னூரில் செயல்படுகிறது.
தேயிலை சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க டேன்டீ நிறுவனத்தால் இயலவில்லை. இதனால் ரூ.240 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிர்வாக வசதிக்காக நிலங்களின் சில பகுதிகளை வனத்துறைக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. டேன்டீ நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கக்கூடாது என்று தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாக உள்ளதாக கூறி வருகின்றனர். எனவே, தாயகம் திரும்பிய தமிழர்களான டேன்டீ தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும், டேன்டீ நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும் அந்நிறுவன தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago