திருவண்ணாமலை: வந்தவாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து வெற்றுத்தாளை இளைஞர்கள் மனுவாக அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆர்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் ஆர்.சக்திவேல் பேசும்போது, “வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3.10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரத்தை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை” என்றார்.
இந்நிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது உள்ளே வந்த கீழ்சாத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பட்டு அண்ணா நகர் இளைஞர்கள் சிலர், “எதுவும் எழுதப்படாத வெற்று வெள்ளைத் தாளை” வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தியிடம் மனுவாக வழங்கினர்.
» 20 நீதிபதிகள் விசாரித்தும் தீர்வு கிடைக்கவில்லை: சிக்கலில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள்
அப்போது அவர்கள், “மாம்பட்டு அண்ணா நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேஷன் கடை கட்டிடம், துணை சுகாதார நிலைய கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மனு அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும், இப்போது வெற்று வெள்ளைத் தாளை நாங்கள் மனுவாக அளிக்கிறோம்” என்றனர். பின்னர், அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago