“மாநில அரசுகளே கல்விக்காக அதிக செலவு செய்கின்றன” - கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கில் வாதங்கள் முன்வைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: “மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

கடந்த 1975 - 1977ல் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தின் 42-வது திருத்தத்தை எதிர்த்து, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் எழிலன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "மத்திய அரசு, நெருக்கடி நிலை காலகட்டத்தில் கொண்டு வந்த இந்த அரசியல் சாசன திருத்தம், மாநில அரசின் தன்னாட்சி அந்தஸ்தை பறிக்கும் வகையில் உள்ளது. இது கூட்டாட்சி கொள்கையை பாதிக்கிறது. கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டு, 46 ஆண்டுகளுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த அரசியல் காரணங்களுக்காகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள அறக்கட்டளை அரசியல் சார்பற்றது.

இந்த வழக்கில் மேற்கோள்காட்டப்படும், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. 42-வது அரசியல் சாசன திருத்தம் விஷமரத்தைப் போன்றது. அதை வேரோடு அகற்றவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாக திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது. அரசியல் சாசன நிர்ணய சபையில் கல்வியை பொது பட்டியலில் சேர்க்க வேண்டும். மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும்.

கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக 20 மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. தமிழகம் மற்றும் மேகாலயாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்ததால் கையெழுத்திடவில்லை. எந்தக் காரணமும் இல்லாமல் நெருக்கடி நிலை காலத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இந்தச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1978-ம் ஆண்டு ஆகஸ்டில் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை" என்று வாதிட்டார். வாதங்கள் நிறைவடையாததால், விசாரணை நாளைக்கு (நவ.7) ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்