சென்னை: "கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்" என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 68- வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் மட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் இணையவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் எண்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸூம் தயாரிக்கிறது. படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. கமலின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
» ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி: மதுரையில் டீ, காபி விலையை 15 ரூபாயாக உயர்த்த முடிவு
» திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைக்க எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம்: டிடிவி தினகரன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago