கனமழையால் வேகமாக நிரம்பும் அமராவதி அணை: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உடுமலை: தொடர் மழையால் அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த அமராவதி அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55,000 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அமராவதி அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருகிறது. பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தட்டுப்பாடின்றி நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாவே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு1,400 கன அடி நீர்வரத்து இருந்தது.அணையின் இருந்து மின் உற்பத்திக்காக விநாடிக்கு 175 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, ‘‘அணை நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. எந்நேரமும் அதன் முழு கொள்ளளவை எட்டலாம். அப்போது உபரி நீர், அமராவதி ஆற்றின் வழியே திறக்கப்படலாம். எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

பஞ்சலிங்க அருவிக்கு செல்லத்தடை: இதேபோல திருமூர்த்திமலை மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்குதொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: திருப்பூர், கோவை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வந்துசெல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வெள்ள அபாயம் நீங்கும்வரை யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு செல்லும் பாதையும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்