சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: முதல்வரிடம் டான்ஸ்டியா கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த செப்.9-ம்தேதி முதல் மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதல்வரை நேரில் சந்தித்து டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கடந்த செப்.4-ம் தேதி வரை குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு மாலை நேரங்களில், அதாவது, 6 முதல் 9 மணி வரை ரூ.35 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 50 கிலோ வாட்டுக்கு கீழ் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.75, 50 முதல்112 கிலோவாட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.150, 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.550 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, காலை 6 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 முதல் 10 மணி வரை மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரூ.7.50-க்கு மேல் கூடுதலாக 25 சதவீதம் மின் கட்டணம்வசூலிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்.5-ம் தேதி முதல் குறைந்தழுத்த (எல்டி) மின்சாரம்உபயோகிப்பவர்களுக்கு ‘பீக்அவர்’ நேரங்களில் ஒரு யூனிட்விலை ரூ.9.38 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உயரழுத்த மின்சாரம் (எச்டி) உபயோகிப்பவர்களுக்கு ஒரு யூனிட் விலை ரூ.6.75என நிர்ணயம் செய்திருப்பதால், பீக் ஹவர் நேரங்களில் இந்தஎச்டி மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.43 ஆகும். அதாவது,எச்டி மின்சாரம் உபயோகிப்பவர்களைவிட எல்டி மின்சாரம் உபயோகிப்பவர்கள் 94 பைசா கூடுதலாகசெலுத்த வேண்டும். எனவே, எல்டி மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.50 ஆக இருப்பதை ரூ.6.75 ஆக குறைக்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருயூனிட் மின் கட்டணம் ஆந்திராவில் ரூ.7.21, கேரளாவில் ரூ.6.30,தெலங்கானாவில் ரூ.7.21, கர்நாடகாவில் ரூ.8 என வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் இது ரூ.9.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதை ரூ.6.75 ஆக குறைக்கவேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்