ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல் அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 187 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை இலங்கை மன்னார் பகுதியின் 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் என 10 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இவர்களை நேற்று காலை தனுஷ்கோடி மெரைன் போலீஸார் விசாரணை செய்து, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
2 மாத குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை, கணவர் ஆகியோருடன் வந்த அனுசியா என்பவர் கூறும்போது, பொருளாதார நெருக்கடியால் உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டோம். அதனால் தமிழகம் வந்தோம். எங்கள் 4 பேரையும் படகில் அழைத்து வர ரூ.1.50 லட்சம் கொடுத்தோம் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago