குப்பைக் கிடங்காக மாறும் சிங்காநல்லூர் படகுத்துறை: அறிவிப்பு பலகை, தடுப்புச் சாவடியால் பயனில்லை

By கா.சு.வேலாயுதன்

குப்பைபோடுவதை தடை செய்து அறிவிப்பு பலகை வைத்தும், தடுப்புச் சாவடி அமைத்தும் பயனின்றி குப்பைக் கிடங்காக மாறி வருகிறது சிங்காநல்லூர் படகுத்துறை.

கோவை நகரில் வ.உ.சி. பூங்கா, உயிரியல் பூங்கா, சினிமா தியேட்டர்கள் தவிர, வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, 1997-ல் 850 ஏக்கர் பரப்பு கொண்ட சிங்காநல்லூர் குளத்தில் படகுத்துறை அமைக்கப்பட்டது.

அப்போதைய திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தமாகா-வைச் சேர்ந்த மேயர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த படகுத்துறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன.

இந்தக் குளத்தில் மாநகரின் சாக்கடை கழிவுநீர் கலந்து, கூவம் ஆறுபோல காட்சியளிக்கிறது. இங்கே படகுத்துறை அமைப்பது வீண். மேலும், இங்கு படகுகளில் சவாரி செய்வோருக்கு சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களும், சுவாசக்கோளாறுகளும் ஏற்படும் என்றெல்லாம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

எனினும், விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு, குளத்தில் படகுகளை இயக்கியது மாநகராட்சி. இந்தக் குளத்தில் அடிக்கடி ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளரும். அவற்றை பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களைக்கொண்டு மாதக்கணக்கில் அகற்றுவார்கள். பின்னர், சில நாட்கள் படகுகள் இயக்கப்படும். மீண்டும் குளத்தில் ஆகாயத்தாமரை நிறைந்துவிடும். இது தொடர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் படகுத்துறை மூடப்பட்டுவிட்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் படகுத் துறையைப் புதுப்பித்து, படகு விடும் பணியைத் தொடங்கியது மாநகராட்சி நிர்வாகம். ஆகாயத்தாமரையை முற்றிலும் அகற்றி, குளத்தில் சிறிதும் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் கொட்டப்படும் குப்பை

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “படகுத்துறையை புதுப்பித்த பின்னர், படகுகள் விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், படகுகள் விடவில்லை. குப்பை கொட்டுவதைத் தடுக்க தடுப்புகளும், சோதனைச்சாவடியும் அமைத்த பின்னர், சில மாதங்களுக்கு குப்பை, கழிவுகள் இல்லாமல் குளக்கரை பளிச்சிட்டது. அப்போது, எந்த நேரமும் ஊழியர்கள் இங்கே இருப்பார்கள். ஆனால், தற்போது சில நேரங்களில் மட்டும்தான் ஊழியர்களைக் காணமுடிகிறது. அதிலும், இரவு நேரங்களில் ஆட்களே இருப்பதில்லை.

அதனால் பலர் இருசக்கர வாகனங்களிலும், தலைச்சுமையாகவும் கொண்டுவந்து குப்பை மூட்டைகளை குளத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால், மீண்டும் குளக்கரை குப்பைக் கிடங்காக மாறி வருகிறது.

இங்கு படகுகளை இயக்க முடியவில்லை என்றாலும், இங்குள்ள சிறுவர் பூங்காவையாவது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடலாம். மக்கள் நடமாட்டம் இருக்கும்போது, அது குளத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். எப்போதுதான் இதற்கு விடிவுகாலம் பிறக்குமோ?” என்றனர்.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் படகுத் துறையைப் புதுப்பித்து, படகு விடும் பணியைத் தொடங்கியது மாநகராட்சி நிர்வாகம். ஆகாயத்தாமரையை முற்றிலும் அகற்றி, குளத்தில் சிறிதும் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பராமரிப்பின்றிக் கிடந்த இந்தக் குளம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுத்தம் செய்யப்பட்டது. ரூ.35 லட்சம் செலவில், ஆகாயத்தாமரையை அகற்றி, குளத்தின் நுழைவாயிலைப் புதுப்பித்ததுடன், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை முழுமையாக மாற்றினர்.

சூலூரில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வாடகை அடிப்படையில், சோதனை முறையில் 10 நாட்கள் படகு சவாரி நடத்தப்பட்டது. பின்னர், குளத்துக்கு நீர்வரத்து குறைந்ததால் படகுச் சவாரி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து, முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டு, இந்தக் குளத்தில் படகுப் போட்டிக்கான சிறப்பு பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்தன.

மேலும், குளத்தில் சாக்கடைக் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, அதே இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. குளத்தின் கரை சீரமைக்கப்பட்டு, கட்டிடக் கழிவு மற்றும் குப்பையை குளத்தில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில், இரும்புத் தடுப்பும் அமைக்கப்பட்டது.

அதையும் மீறி, குளக்கரையில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்தது. எனவே, குளக்கரை பாதைக்கு சோதனைச்சாவடி போல தடுப்பு அமைத்து, மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இங்கு குப்பை, கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்