சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கபட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடை கட்டணம் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதேபோல, தெற்கு ரயில்வேயில் திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago