சென்னை: மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சேக்கிழார் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கும்போதெல்லாம் மின்வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கும் வழங்கும் நடைமுறை காலம் காலமாக உள்ளது. ஆனால்தற்போது நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டும் என்ற பெயரில் மின்வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மாத காலம் தாழ்த்தியே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
இதேபோல் மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கும்போதெல்லாம் ஓய்வூதியர்களுக்கும் வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர்களுக்கு வழங்காமல் இருப்பது, ஓய்வு பெற்றோர் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரியத்துக்கு நற்பெயரையும், வருவாயையும் ஈட்டித் தந்தஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் உள்ளிட்ட 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பதைக் காரணமின்றி தவிர்த்து வருவதை உங்கள்கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். எனவே, நிதித் துறைக்கு தகுந்த உத்தரவிட்டு மின்வாரியத்தில் உள்ள 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க ஆவன செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago