திருச்சி: திருச்சி அண்ணா அறிவியல் மைய(கோளரங்க) திட்ட இயக்குநர் ஆர்.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் நவ.8-ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.41 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.21 மணிக்கு முடிவடையும். இதில் பிற்பகல் 3.48 மணியில் இருந்து மாலை 5.11 மணி வரை முழு சந்திர கிரகணம் நடக்கும். ஆனால், சந்திரன் உதயமாவது திருச்சி பகுதியில் மாலை 5.40 மணிக்குத் தான் தெரியும்.
எனவே, திருச்சி பகுதியில் முழு கிரகணத்தைக் காண இயலாது. மேலும், இந்த பகுதி கிரகணமும் சந்திரன் உதித்த சில நிமிடங்களில் முடிந்துவிடும். எனவே கிழக்குத் தொடுவானில் சந்திரன் உதயத்தின்போது கிரகணத்தை சிறிது நேரம் வெறும் கண்களால் கூட காணலாம்.
சந்திர கிரகணத்தைக் காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களைக் காத்துக் கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை. மீண்டும் 2023 அக்.28-ம் தேதி தமிழகத்தில் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago