மதுரை: மதுரை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.100 முதல் ரூ.10000 ஆயிரம் வரை அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 800 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பைகளை திறந்த வெளியில் பொதுமக்கள், கடைக்காரர்கள், பெரும் நிறுவனத்தில் கொட்டாமல் இருக்க மாநகராட்சி வீடுகள் தோறும் நேரடியாக குப்பை சேகரிப்பதோடு பொது இடங்களில் குப்பை தொட்டிகளையும் வைத்துள்ளது. அதுபோல், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைக்காரர்கள், பெரும் நிறுவனத்தினர் தங்கள் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை சேகரித்து ஒப்படைக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆனாலும், தனியார் தொழிற்சாலைகள், நிறுவனத்தினர், தனியார் மருத்துவமனையினர் வைகை ஆற்றங்கரைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். பொதுமக்களும் குப்பைகளை பொது இடங்களில் வீசி செல்கின்றனர். கடைக்கார்கள், ஹோட்டல் நிறுவனத்தினர் தங்கள் கடைகள் முன் குப்பை தொட்டிகளை வைக்காமல் குப்பைகளை பொதுஇடங்களில் கொட்டுகின்றனர். அதனால், மாநகராட்சி குப்பைகளை பொது இடங்களில் குப்பை கொட்டுவருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த புதிய உத்தரவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தனி நபர் குப்பையை பொது இடத்தில் கொட்டினால் ரூ.100, கடைக்காரர்கள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. அரை டன், ஒரு டன் குப்பை கொட்டுவோருக்கு ரூ.10000 அபராதம் விதிக்கிறோம். கடைகள் முன் குப்பைத்தொட்டி வைக்காதவர்களுக்கும் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஓரளவு பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறைந்துள்ளது'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago