சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதற்கான அபராதத் தொகையை செலுத்தாவிடில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், தமிழக அரசு போக்குவரத்து விதிமீறலுக்கு புதிய அபராதத் தொகையை வசூலித்து வருகிறது. இதன்படி மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி அபராதத் தொகை விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பலர் அபராதத் தொகையை செலுத்தாமல் வாகனம் ஓட்டி வருகின்றனர். இதற்கு தீர்வு காண அபராதத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நீதிமன்றம் வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago