சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறைகள் சார்பில் ரூ.51.30 கோடி மதிப்பிலான விடுதி, வகுப்பறைக் கட்டிடங்களைமுதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் ரூ.13.64 கோடியில் மதுரை,தேனி மாவட்டங்களில் 3 உண்டுஉறைவிடப் பள்ளிகள், மதுரையில் 2 பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நாகை, தருமபுரி மாவட்டங்களில் 2 கல்லூரி விடுதிக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.9.92 கோடியில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கான 6 விடுதிக் கட்டிடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறையில் ரூ.10.52 கோடியில்4 பள்ளிக் கட்டிடங்கள், செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ரூ.17.22 கோடியில்3 மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்கட்டிடங்கள் என மொத்தம் ரூ.37.66 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
புதிய தாட்கோ அலுவலகங்கள்: இதுதவிர, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, மயிலாடுதுறைஆகிய 6 மாவட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோஅலுவலகங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
» தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணி: போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு
» கன்னியாகுமரி - அசாம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
197 பேருக்கு நியமன ஆணை: மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறைக்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1,கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியபணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 பேருக்கு பணி நியமனஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 பேருக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். பின்னர், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஐஐடி மூலம் பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், ஹெச்சிஎல் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு பயில பயிற்சித் தொகை, இந்தியன் ஹெல்த் கேர் மூலம் மெடிக்கல் கோடிங் பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் மூலம் பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்டு ஓட்டல் நிர்வாகம், உணவு உற்பத்தி பட்டயப் படிப்பு ஆகிய பயிற்சிகளுக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளை வழங்கும் அடையாளமாக 9 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், தலைமைச்செயலர் இறையன்பு, தாட்கோதலைவர் உ.மதிவாணன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் தென்காசி ஜவஹர்,பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அனில்மேஷ்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago