ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்