விருதுநகர் | கிருஷ்ணசாமி கைதை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விருதுநகரில் இக்கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து கார் மூலம் அக்கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் டோல்கேட் அருகே வந்தபோது அவரை சுமார் 40 கார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதனால், திருமங்கலம் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாகனத்தைத் தொடர்ந்து 4 வாகனங்கள் மட்டுமே செல்ல அமனுமதியளிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவருடன் காரில் வந்த அக்கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

இதுபற்றி தகவலறிந்த விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு டாக்டர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், பழைய பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலர் குணசேகர் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் தரையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினருடன் எஸ்.பி. மனோகர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 85 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதேபோன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்