அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட சீரழிவை ஒன்றரை ஆண்டில் சரி செய்து விடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

By செய்திப்பிரிவு

சென்னை: 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி சீரழித்ததை ஒன்றரை ஆண்டில் சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் நல்ல பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 2ம் தேதி ) சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த முதல்வர், மழை நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் மழை நிலவரம் குறித்தும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், நீர் தேக்கங்களின் நிலைமை குறித்தும் முதல்வருக்கு எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "வட சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். அதை சரி செய்ய நிறைய வருடம் ஆகும். ஆனால் நாங்கள் ஓன்றரை ஆண்டில் முடித்து விடுவோம் என்ற நம்பிகை உள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்