சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் தொடர்ந்து பல மணிநேரம் கனமழை விடாது பெய்தது. கனமழையின் காரணமாக சாலையில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளது. சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு எவ்வளவு மழை? இந்நிலையில் நகரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி எங்கெங்கு எவ்வளவு மழை பதிவானது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி அலுவலகம், பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதிகளில் தலா 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர், அயனாவரம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கத்தில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ மழை, பொன்னேரியில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆவடி காவல்நிலையத்தில் வரவேற்பறை, கைதிகள் லாக் அப் வரை நீர் சூழ்ந்துள்ளது.
ஏரிகள் நிலவரம்: கனமழை காரணமாக திருவள்ளூர் சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 66 கன அடியில் இருந்து 281 கன அடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே நாளில் 90 மில்லியன் கன அடி நீர் வந்ததால் ஏரியின் நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி 2765 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2000 கன அடி நீர் வரத்து உள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி தொடங்கி விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
4 நாட்களுக்கு மழை: தமிழகப் பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வும்ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றுமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் விடுமுறை: கனமழை காரணமாக இன்று (நவ 2) 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago