மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைவதற்கான வழக்கறிஞர் போராட்டங்களை முன்னின்று நடத்திய வழக்கறிஞர் வெள்ளைச் சாமி (83) உடல் நலக்குறைவால் 26-ம் தேதி காலமானார்.
மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என முதல் முதலில் கன்னியாகுமரி வழக்கறிஞர் சங்கத்தில் 1965-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தென் மாவட்டங்கள் முழுவதும் அனைத்து வழக்கறி ஞர் சங்கங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பின்னர் வழக் கறிஞர்கள் தீவிர போராட்டத் தில் இறங்கினர். இப்போராட்டங் களுக்கு தலைமை வகித்தவர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெள்ளைச்சாமி.
இவர் தலைமையில் தென் மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து தீவிர போராட் டத்தில் குதித்தனர். இதன் விளை வாக தென்னகத்தில் உயர் நீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நீதிபதி ஜஸ்வந்த்சிங் தலைமையில் 1985-ல் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தின் சுழல் அமர்வு (சர்கியூட் பெஞ்ச்) ஒன்றை தென்னகத்தில் அமைக்கலாம் என பரிந்துரை செய்தது. பின்னர் சுழல் அமர்வு நிரந்தர கிளையாக மாற்றப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர கிளை மதுரையில் 2004-ல் திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற கிளை தொடங்கிய முதல் நாளில் முதல் வழக்காக ஆள்கொணர்வு மனு ஒன்றின் மீது வழக்கறிஞர் வெள்ளைச்சாமி வாதாடினார்.
மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைவதற்கு உழைத்தவர்களில் மிக முக்கியமானவரான வழக்கறி ஞர் வெள்ளைச்சாமி, உடல்நலக் குறைவால் சனிக்கிழமை திருமங் கலத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். அவரது உடலுக்கு நீதி பதிகள், அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்க்கை வரலாறு
வழக்கறிஞர் வெள்ளைச்சாமி விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பணகுடியைச் சேர்ந்த கருப்பையா- பாப்பம்மாள் தம்பதி யின் மகனாக 7.8.1933-ல் பிறந்தார். ஈரோடு மற்றும் நெல்லையில் பள்ளி கல்வியை முடித்து, சென் னையில் பட்டப் படிப்பையும், சட்டப் படிப்பையும் முடித்தார். 1967-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பிரபல மூத்த வழக்கறிஞர் வெங்கடேச அய்யரி டம் ஜூனியராகப் பணிபுரிந்தார். சர்வீஸ் (பணி) வழக்குகளில் திற மையானவர். மதுரை மாவட்ட நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவ ராக 12 ஆண்டுகளும், உயர் நீதிமன்ற கிளை மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.
வழக்கறிஞராக பதிவு செய்த நாளில் இருந்து மரணமடையும் வரை 49 ஆண்டு காலம் வழக்கறிஞராக தொய்வின்றி பணியாற்றி னார். இவரது உடன் பிறந்த தங்கை சுகுணா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'வெள்ளைச்சாமி வழக் கறிஞர்கள் எப்படி இருக்க வேண் டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர். அவரது தீவிர போராட்டமே உயர் நீதிமன்ற கிளை அமைவதற்கு முக்கிய காரணமா கும். முதுமை காலத்திலும் நீதி மன்றத்துக்கு வர தவறியதில்லை. உயர் நீதிமன்ற மதுரை வழக்கறி ஞர் சங்கத் தலைவராக இருந்து வழக்கறிஞர்களின் அறிவு மேம்படுத் தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சி களை நடத்தினார். வழக்கறிஞர் களின் உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் முன்னின்றார். கடந்த வாரம் உயர் நீதிமன்ற கிளை யில் நடைபெற்ற தூய்மைப்பணி முகாமில் பங்கேற்ற அவர் இளம் வழக்கறிஞர்களுக்கு இணையாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு நீதி பதிகளின் பாராட்டுகளை பெற்றார். அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago