சென்னை: அக்.1-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் 61,56,360 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக அக்.21 தேதியன்று 2,65,683 பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. 01.01.2022 முதல் 31.07.2022 வரை மொத்தம் 3,01,15,886 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.08.2022 முதல் 31.08.2022 வரை மொத்தம் 56,66,231 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.09.2022 முதல் 30.09.2022 வரை மொத்தம் 61,12,906 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.10.2022 முதல் 31.10.2022 வரை மொத்தம் 61,56,360 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 21.10.2022 அன்று 2,65,683 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 43,454 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022, அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,57,688 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும் பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 36,33,056 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
» புல்வாமா தாக்குதல் | ஃபேஸ்புக்கில் கருத்திட்டவருக்கு 5 ஆண்டு சிறை - பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago