சென்னை: கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2000 களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2000 களப்பணியாளர்கள் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடிநீரின் தரத்தை உறுதிசெய்ய ஆய்வகம் மூலம் நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது.
குடிநீரில் குளோரின் அளவு மற்றும் அதில் கலந்துள்ள திடப்பொருள்களின் அளவை (Total Disolved Solid) பரிசோதிக்க, நாளொன்றுக்கு 2000 மாதிரிகள் என்பதை 3000 மாதிரிகளாக அதிகரிக்கப்பட்டு களப்பொறியாளர்களால் பரிசோதிக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியமும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 200 இடங்களில் குடிநீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரம் பரிசோதிக்கப்படுகிறது. குடிநீர் விநியோக அமைப்பில் தேவைக்கேற்ப ஆங்காங்கே உடனடியாக குளோரின் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான பிளீச்சிங்பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற ரசாயனபொருட்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது. ஹைபோகுளோரின், கரைசல்குளோரின் வாயு மற்றும் குளோரின் மாத்திரைகளை இறுதி செய்யப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளைப்படி தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்படும். இருப்பினும் ஒருமாதத்திற்கு தேவையான அளவு அந்தந்த நிலையங்களில் உள்ளது.
» பாகிஸ்தானில் இம்ரான் கான் பேரணி வாகனம் மோதி பத்திரிகையாளர் மரணம்
» புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை
மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரினை இறைக்க 16 பெரிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 92 சிறிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் குடிநீர் விநியோக நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டடுள்ளது. ஊர்தியின் மேல் பொருத்தப்பட்ட நீர் உறிஞ்சும் இயந்திரம் ஒன்று தயாரான நிலையில் பகுதி 10-ல் கோடம்பாக்கத்தில் உள்ளது. அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையங்களிலும், உள்ள இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
கழிவுநீர் அடைப்பு ஏற்படும் 502 இடங்கள் கண்டறியப்பட்டு, 282 தூர்வாரும் இயந்திரங்கள், 125 ஜெட்ராடிங் இயந்திரங்கள் 4 சிறிய ஜெட்ராடிங் இயந்திரங்கள், 32 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் ஆக மொத்தம் 500 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2000 களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை குடிநீர் வாரியத்தின் பகுதி 1 முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவுக்கு கழிவுநீர் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பருவமழையின் போது கூடுதலான கழிவுநீர் ஊர்திகள் தேவையிருப்பின் அங்கீகரிக்கப்பட்டவர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மறைந்துள்ள மற்றும் சேதமடைந்த இயந்திர துளை கதவுகள் கண்டறிந்து சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், போதுமான அளவு கதவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வாரிய ஈக்காட்டுத்தாங்கல் பண்டக சாலையில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உள்ளது. மேலும் 1150 கதவுகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை ஆய்வு செய்ய அனைத்து பகுதிகளிலும் செயல் பொறியாளர்கள் சிறப்பு அலுவலராக செயல்பட்டு வருகின்றனர் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு குழாய்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் கழிவு நீர் உந்து நிலையம் ஆகிய இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவு 24 மணிநேரமும் செயல் பட்டு வருகிறது பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் மற்றும் கழிவுநீர் புகார்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா எண் 1916 தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago