வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளைஅரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைதொடங்கியுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள்இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் பாதாள சாக்கடைதிட்டப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியபணிகள், மின்வாரிய பணிகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் பள்ளங்களை சுற்றிதடுப்பு வேலிகள் அமைக்கவில்லை என்றும், அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர், பல்லாவரம் போன்ற இடங்களில் பள்ளங்கள் தற்காலிகமாக மண் மற்றும்இதர கட்டுமானப் பொருட்களால் மூடப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வருகின்றன. அப்பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டால் மேடு, பள்ளம் தெரியாத சூழ்நிலையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர்கலந்த நீர் சாலைகளில் பெருக்கெடுத்துஓடுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாத தொடக்கத்தில் மழை நீர்வடிகால் பணிகளை ஆய்வு செய்தமுதல்வர் ஸ்டாலின், ஒரு மாதத்துக்குள்பணிகள் முடிக்கப்படும் என்றுதெரிவித்தார். ஆனால், இன்னமும் முடிவடையவில்லை. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கூடுதலாக ஆட்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்துமுடிக்கவும், தோண்டப்பட்ட பள்ளங்களைச் சுற்றி உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து, முதல்வர் ஸ்டாலின் மக்களை பாதுகாக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago