சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சாலைகளில் 4 ஆயிரத்து 822 இடங்களில் இருந்தபள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வரும்நாட்களில் சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து தடச் சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிமீ நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையை முன்னிட்டு ஏற்கெனவே பிற சேவைத் துறைகளான மின்துறை, சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ரூ.16 கோடியில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 29 கிமீ நீள சாலைகளை சீரமைக்க வேண்டிய நிலையில், தற்போது வரை 20 கிமீ நீளத்துக்கு மேல் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago