புதிய செல்போன் வாங்குவதற்காக வேலூரில் கடத்தல் நாடகமாடிய சிறுவர்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் புதிய செல்போன் வாங்குவதற்காக கடத்தல் நாடகமாடிய பள்ளி சிறுவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளரின் மகன். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வீட்டின் அருகேயுள்ள 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் வீட்டுக்கு செல்வதாக நேற்று முன்தினம் இரவு கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், 7-ம் வகுப்பு மாணவரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரவு 11 மணியளவில் மாணவரின் தந்தைக்கு வந்த செல்போனில் அழைப்பில் பேசிய மர்ம நபர், ‘உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். உடனடியாக ரூ.1 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம். நாங்கள் சொல்லும் இடத்தில் பணத்தை கொடுக்க வேண்டும்’ என கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர்.

வாகன தணிக்கை தீவிரம்: இதனால், பதறிய பெற்றோர்கள் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் தனிப் படையினர் விசாரணையை தொடங்கினர். மேலும், மாநகரம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர், மாணவரின் பெற்றோருக்கு வந்த செல்போன் அழைப்பில் பணத்துடன் வருமாறு அழைப்பு வந்தது. அதன்படி, பணத்துடன் சென்ற மாணவரின் பெற்றோரை, அவர்கள் பல இடங்களில் அலைகழித்தனர். அவர்களை, காவல் துறையினர் மாறுவேடத்தில் தொடர்ந்து கண்காணித்தனர். இதற்கிடையில், சதுப்பேரி ஏரிக்கரை அருகே இறுதியாக பணத்தை வைத்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 7-ம் வகுப்பு மாணவரும், 10-ம் வகுப்பு மாணவரும் அங்குள்ள பள்ளத்தில் இருந்து வெளியே வந்து பணப்பையை எடுத்தனர். அவர்களை, காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், செல்போன் வாங்கிக் கொடுக்க பெற்றோர் மறுத்ததால் புதிய செல்போனை தாங்களே வாங்குவதற்காக கடத்தல் நாடகமாடியதாக தெரிவித் தனர். இதையடுத்து, மாணவர்கள் இருவரையும் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்