சென்னை: குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.
உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக வெளியாகும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரபூர்வ தகவல்களுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago