தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நவ.4-ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளித்த செய்தி கிடைத்ததும் நாட்டிலேயே முதல் முதல்வராக மு.க.ஸ்டாலின் அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார். கடந்த அக்.18-ம் தேதி பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கும் அனுப்பினார். இந்த தீர்மானத்தை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையிலும், குழு அறிக்கையை ஏற்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும், நவ.4-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பெரம்பலூரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்