கொள்கைளை முதல்வரிடம் சமர்ப்பித்த மாநில திட்டக் குழுவினர் 
தமிழகம்

திருநர் நலக் கொள்கை: முதல்வர் ஸ்டாலினிடம் மாநிலத் திட்டக் குழு விவரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு திருநர் நலக் கொள்கை உட்பட 3 புதிய கொள்கைள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநில திட்டக் குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை (மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா ), தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை, திருநர் நலக் கொள்கைகள் ஆகியவை குறித்து முதல்வரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இக்கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொழில் மயமாதல் கொள்கை குறித்து மல்லிகா சீனிவாசன், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து அமலோற்பவநாதன், திருநர் நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜ் ஆகியோர் விவரித்தனர்.

SCROLL FOR NEXT