சென்னை: சென்னை நந்தனத்தில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இடவசதி போதிய அளவில் இல்லை.
இதன்காரணமாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3.90 லட்சம் சதுரஅடியில், ரூ.365 கோடி செலவில்12 மாடிகளுடன் இரண்டு பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் அதிகாரிகள், பணியாளர்கள் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு வாடகை தளம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. ஒட்டுமொத்தபணிகளும் முடிக்கப்பட்டுள்ளதால், புதிய மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago