தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் கட்சி தலைவர்கள், அமைப்பினருக்கான நேரம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

By என். சன்னாசி

மதுரை: பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான உத்தேச நேரம் ஒதுக்கீடு குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம்: அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் காலை 10 முதல் 10.15 மணிக்குள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 0.15-10.30, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி 10.30-10.45, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 10.45-11, மதிமுக -11-11.15, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம் 11.15-11.30 மணிக்குள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞரணி(சிவகங்கை) 11.30-11.45, அதிமுக எம்பி தர்மர் 11.45-12, ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் 12-12.15, ராமநாதபுரம் பாமக தலை செயலர் 12.15- 12.30, முக்குலத்தோர் புலிப்படை(கமுதி) 12.30-12.45, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு (திருப்பூர்) 12.45-13, தென்நாடு மக்கள் கட்சி (சிவகங்கை) 13-13.15 மணிக்குள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமமுக ராமநாதபுரம் மாவட்ட செயலர் முருகன் 13.15, 13.30, அகில இந்திய தேவரின் மக்கள் பாதுகாப்பு படை 13.30, 13.45, அகில இந்திய பார்வர்டு பிளாக்(மதுரை) 13.45- 14, தேமுதிக மாவட்ட செயலர் (ராமநாதபுரம்) 14-14.45, அதிமுக வழக்கறிஞர் பிரிவு (ராமநாதபுரம்) 14.15-14.30, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை 14.30-14.45, நாம் தமிழர் கட்சி 14.45-15, அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் (ராமநாதபுரம்) 15-15.10, பசும்பொன் தேசிய கழகம்(கமுதி) 15.10-15.20, மறத்தமிழர் சேனை தமிழர் நாடு 15.20-15.30, அனைத்திந்திய பார்வர்டு பிளாக் (சுபாஸ்சிஸ்ட்- மதுரை) 15.30-15.40, ஜனநாயக பார்வர்டு பிளாக் 15.40- 15.50, அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை (மதுரை ) 15.50-16 மணிக்குள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்துராமலிங்கம் நினைவுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்(கமுதி) 16- 16.10, மனித உரிமை காக்கும் கட்சி (கமுதக்குடி) 16.10- 16.20, பாரதிய பார்வர்டு பிளாக் (உசிலம்பட்டி) 16.20- 16.30, ராஷ்டிரிய லோக் ஜன சக்தி (சென்னை) 16.30- 16.40, தமிழ் மாநில சிவசேனா கட்சி (மதுரை) 16.40- 16.50, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு (கமுதி) 16.50-17, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்வி அறக்கட்டளை(மதுரை) 17- 17.10 மணிக்குள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்