கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணை

By செய்திப்பிரிவு

உதகை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் இன்று (அக்.26) விசாரணையை தொடங்கினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு, வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட பலரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், வழக்கை கடந்த மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணைநடத்திய நிலையில், அதுதொடர்பான வாக்குமூலம், விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடிபோலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோடநாடு எஸ்டேட்டில், சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், எஸ்டேட்டின் மேலாளர் நடராஜ், பணியாளர்கள், சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்