சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்.21-ம் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 2,63,610 பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
அந்த வகையில் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 03.01.2022 அன்று 1,35,977 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 28.02.2022 அன்று 1,43,252 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28.03.2022 அன்று 2,10,634 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 25.04.2022 அன்று 1,74,475 பயணிகளும், மே மாதத்தில் அதிகபட்சமாக 26.05.2022 1,91,720 பயணிகளும், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகளும், ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 29.08.2022 அன்று 2,20,898 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 30.09.2022 அன்று 2,46,404 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் 20.10.2022 அன்று 2,48,556 பயணிகளும், 21.10.2022 அன்று ஒரே நாளில் 2,63,610 பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 22,383 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,106 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,142 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
» ‘குடும்ப அமைப்பிற்கு உள்ளும் புறமும் வாழும் பெண்களின் கதை’ - வெளியானது ‘அன்னபூரணி’ ஃபர்ஸ்ட் லுக்
» நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரம் - நாளை அறிக்கை வெளியீடு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago