சென்னை: உச்ச நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தாக 271 வழக்குகள், விதிகள் மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக 14 வழக்குகள், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக 69 வழக்குகள் என மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் "உச்ச நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி சென்னையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக 271 வழக்குகளும், விதிகள் மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக 69 வழக்குகளும் என இதுவரையில் மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில், தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் பேரில், தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரங்கள் மட்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
» கோவை கார் வெடிப்பு சம்பவம் | குன்னூரை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை
» திரை (இசைக்) கடலோடி- 14 | அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே..
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடந்த அக்.23-ம் தேதியன்று முதல் இன்று (அக்.25) காலை வரை நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 271 வழக்குகளும், தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக 69 வழக்குகளும் என மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago