சென்னை: தமிழை காக்க வரும் 27-ம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள போராட்டம், மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்கான நாடகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மருது சகோதரர்களின் 221 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த இறந்த பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் நேற்றே அறிக்கை வெளியிட்டேன். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாகத்தான், முத்துகிருஷ்ணன் தவறி விழுந்து இறந்துபோனார். வாழ வேண்டிய இளம் வயதிலேயே இப்படி இறந்துபோனார்.
அதேபோல், நேற்று இன்னொரு சம்பவம், ஆந்திர எல்லையில், பாஃஸ்டேக் கருவிகளில் பழுது இருந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் படித்துவரும் சட்டக் கல்லூரி மாணவர்களின் காரில் இருந்த கருவி சரியான கணக்கை காட்டியும்கூட மாணவர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். உருட்டுக்கட்டை, கம்பிகளால் தாக்கியுள்ளனர். அருகில் இருந்த கிராமங்களில் இருந்தெல்லாம் வந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவல்துறை அநியாயமாக செயல்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக தாக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தை கையிலெடுத்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது, குண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, வரும் 27-ம் தேதி பாஜக சார்பில் நடைபெறவுள்ள தமிழை காக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழை காக்க பல தமிழறிஞர்கள் 1938-ல் இருந்து போராடி வந்து, 38-ல் இந்தி விரட்டப்பட்டு மீண்டும் 1948-ல் கொண்டுவரப்பட்டது. அப்போதும் விரட்டப்பட்டு, 1965-ல் இந்தி மீண்டும் மகுடம் சூடும் என்றபோது, மொத்த தமிழ்நாடும் போர்க்களமானது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டார்கள். 8 பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.
இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்து இந்தியை விரட்டிய இந்த தமிழ்நாட்டு மண்ணில், காலூன்றிவிடலாம் என்ற மனப்பால் குடித்தவாறு பாஜகவினர் இந்திக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று சொல்வது வெட்கக்கேடானது, அவமானகரமானது. தமிழர்கள் இதை பொருத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி எதிர்த்து போராடிய களங்கள் ஒருபோதும் வீண்போகாது. மீண்டும் அந்த களங்கள் வரும். மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாஜக இந்த நாடகத்தை நடத்துகிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago