சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில்களில் முன்பதிவு மற்றும்முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து 3 நாட்களில் (அக்.19 முதல் அக்.21 வரை) 6 லட்சத்து ஆயிரத்து 388 பேர்பயணம் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சென்னையின் புறநகர் பகுதிக்கும், அருகில் உள்ள இடங்களுக்கும் மக்கள் ரயில்களில் பயணம்செய்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு விரைவு ரயில்கள், மின்சார ரயில்களில் முன்பதிவு, முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து அக்.19 முதல் அக்.21 வரை 3 நாள்களில் 6 லட்சத்து ஆயிரத்து 388 பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 384பேர் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக, கடந்த 21-ம் தேதி மட்டும் விரைவுரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து 86 ஆயிரம் பயணம் செய்தனர்.
சென்னையிலிருந்து புறநகர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து 3 லட்சத்து 73 ஆயிரத்து 4 பேர் பயணம் செய்துள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மூர்மார்க்கெட் வளாகம் ஆகிய நிலையங்களிலிருந்து மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர். கரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாகப் பண்டிகைக் காலத்தில் குறைவான பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்தஆண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகள் வசதிக்காக, சிறப்புரயில்கள் இயக்குவது, காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமுள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது ஆகியநடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago