தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 1,600 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலைய நுழைவுவாயிலில் ஸ்கேனர் கருவிகள் மூலம் பயணிகளின் உடமைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago