மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்தியாவில் 50 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், இன்னும் ஓரிரு மாதங்களில் இம்மையம் முழு மையாக செயல்படத் தொடங்கும் என்று வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 2-ம் உலகப் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 1945-ல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட் டன. பின்னர், மக்கள் அனைவ ரும் இங்கு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யலாம் என தெரிவிக் கப்பட்டது. தற்போது அரசுத் துறை வேலைவாய்ப்புக்காக கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அரசுத் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள் ளோர் மட்டுமின்றி, அந்தத் துறை சார்பில் நாளிதழ்களில் விளம்ப ரம் கொடுத்து, அதைப் பார்த்து விண்ணப்பிக்கும் நபர் களையும் வேலைக்குத் தேர்வு செய்யலாம் என்ற முறை அமல் படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 80 லட்சம் பேர்
தமிழகம் முழுவதும் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய் துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரு கிறது. இதையடுத்து, வேலை வாய்ப்புத் துறை பதிவு, பரிந்து ரைகளைத் தாண்டி, பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.
திறமைக்குத் தகுந்த வேலையை தேர்வு செய்ய ஆலோசனை, போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி வழங்குதல், தேவையான புத்தகங்கள் வழங்குதல், பள்ளி, கல்லூரி, விடுதிகளில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கு, கண்காட்சி நடத் துதல் உள்ளிட்டவற்றிலும் வேலை வாய்ப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
50 அலுவலகங்கள்
போட்டித் தேர்வுக்கான வழி காட்டி முகாம்களில், ஏற்கெனவே தேர்வுகளில் வெற்றி பெற்ற வர்களைக் கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர். இதுமட்டுமின்றி, சுயதொழில் தொடங்குவது தொடர் பான ஆலோசனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
2014-ல் மக்களவையில் வெளி யிடப்பட்ட அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 50 அலுவலகங் களைத் தேர்வு செய்து, அங்கு மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம் (Model Carrier Centre) தொடங்க திட்டமிடப்பட்டது. அதன் படி, தமிழகத்தில், கோவை மற்றும் வேலூரில் இந்த மையம் அமை கிறது. இதற்கான உட்கட்ட மைப் புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செய்துவரும் பணிகளுடன், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு கவுன்சலிங் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் இந்த அலு வலகம் மூலம் நடத்தப்படும் . குறிப் பாக, வேலைவாய்ப்பு தேடுவோ ரின் ஆர்வம், குடும்ப நிலையை ஆராய்ந்து, அதற்கேற்ப வேலை வாய்ப்பு பெறவும், தகுதியை வளர்த்துக் கொள்ள வும் இங்கு ஆலோசனை வழங் கப்படும்.
டிசம்பர் அல்லது ஜனவரியில்...
கோவையில் இந்த மையத் துக்காக ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டிடப் பணிகள் நடைபெறுகின் றன. சுமார் 50 பேர் அமரும் வகையில் ஆலோசனை அரங்கு, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான அரங்கு, வீடியோ மற்றும் தொழில்நுட்ப வசதிகள், கம்ப்யூட்டர் வசதி உள்ளிட்டவையும் செய்யப்படும்.
வேலைவாய்ப்புக்காக பதிவு செய்வோர், அது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் தாங்களாகவே திரட்டிக் கொள்ளும் வகையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் அமைக்கப்படும்.
இந்த மாதத்துக் குள் இப்பணிகள் முடிவடைந்து, வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இந்த மையம் முழுமை யாகச் செயல்படத் தொடங்கும்.
என்சிஎஸ் இணையதளம்
இதுகுறித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ஏ.ஜோதிமணி கூறும் போது, “புதிதாக தொடங்க வுள்ள எம்சிசி மையத்துக்காக, இளம் தொழில் அலுவலர் (Young Professional) நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான முதல்கட்டப் பணிக ளைத் தொடங்கிவிட்டோம்.
மத்திய அரசின் தேசிய தொழில்சேவை பராமரிப்பு (NCS) என்ற, வேலைவாய்ப்புக்கான இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்துகொண்டு, 91 மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைத் தேடலாம். அதற்கு இந்த மையம் உதவும். அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்துதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடத்துதல் உள்ளிட்டவைகளிலும் இம்மையம் ஈடுபட்டு வருகிறது.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், அரசு வேலைவாய்ப்புக்கான பதிவைப் புதுப்பிக்கவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவப் படுகிறது. இது மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். மத்திய, மாநில அரசுத் துறை நிறுவனங் கள், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்றுத்தர இந்த மையம் பெரிதும் உதவும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago