சூளைபள்ளம், காணு நகர் பகுதி களை ஒட்டியுள்ள அடையாறு பகுதியில் இதுவரை தூர்வாரப் படாததால் வெள்ள அபாயத்துக்கு பயந்து பலர் வீட்டை காலி செய்துவிட்டனர். இதனால், பல வீடுகளில் ‘வாடகைக்கு’ என்ற பலகைகள் தொங்குகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை விடாமல் பெய்த அடை மழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் குன்றத்தூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சூளைபள்ளம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதில் 20 அடிவரை தண்ணீர் சூழ்ந்த எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம், காணுநகர் ஆகிய பகுதிகளும் அடங்கும்.
வெள்ளம் தந்த படிப்பினைக் குப் பிறகும் அந்தப் பகுதிகளில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படவில்லை. எனவே, நடப்பாண்டும் பெருமழை பெய்தால் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாத மில்லை என்பதால் அப்பகுதியில் பெரும்பாலானோர் வீட்டை காலி செய்து வருகின்றனர். இதனால், சூளைபள்ளம் பகுதியில் பெரும் பாலான வீடுகளில் ‘வாடகைக்கு’ போர்டுகள் தொங்குகின்றன.
இதுகுறித்து சூளைப்பள்ளம் நேரு தெருவைச் சேர்ந்த வாசுகி கூறுகையில், “கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது சூளை பள்ளம் பகுதியை ஒட்டியுள்ள அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வீடுகள் அனைத்தும் மூழ்கின. சுமார் 20 அடி வரை வெள்ளம் சூழ்ந்ததால் பலர் உடைமைகளை இழந்தனர். நான் இந்தப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனக்கு தெரிந்து ஒரே ஒரு முறை மட்டும்தான் சூளைப்பள்ளத்தை ஒட்டியுள்ள அடையாறு ஆற்றை தூர்வாரியுள்ளனர். பெரு மழைக் குப் பிறகும் இந்தப் பகுதியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் மேற்கொள்ளப் படவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பலர், நடப்பாண்டும் வெள்ளம் வந்தால் உடைமைகளை இழக்க நேரிடும் என்று பயந்து வீட்டை காலி செய்து வருகின்றனர். சொந்த வீடு வைத்துள்ளவர்கள் வேறு வழியில்லாமல் இந்தப் பகுதியில் குடியிருக்கிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
சூளைப்பள்ளம் அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்த தனராஜ் கூறும்போது, “மழை வெள்ளத்துக்கு பிறகு சூளைப்பள்ளம், காணு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு கேட்டு வரும் ஒருசிலரும் முதல், இரண்டாம் தளங்களில் வீடு காலியாக உள்ளதா என்றுதான் கேட்கின்றனர். அதிலும் இளைஞர்கள்தான் வீடு கேட்டு வருகின்றனர். குடும்பங்கள் யாரும் வருவதில்லை. வடகிழக்குப் பருவமழைக்காலம் முடியும்வரை இந்த பயம் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.
சூளைப்பள்ளம் பகுதியை ஒட்டியுள்ள அடையாறு சுமார் 200 மீட்டர் வரை அகலம் கொண்டது. ஆனால், அதை முறையாக தூர் வாராததால் தற்போது சுமார் 100 மீட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீர் செல்ல வழி உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால், சூளைப் பள்ளம் பகுதியில் உள்ள கால்வாயிலும், அடையாற்றிலும் மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இந்த குப்பைகள் அடையாற்றில் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அடையாற்றை உடனடியாக தூர்வாருவதோடு, வெள்ள பாதிப்பை தடுக்க தடுப்புச் சுவரையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago