சிவகங்கை:சிவகங்கைசிவகங்கை அருகே இளையான்குடி நெஞ்சத்தூரைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். நிவேதாவுடன் அவரது தாயார் விஜயலட்சுமி (55), உறவினர் திருச்செல்வி (31) ஆகியோர் வந்தனர். ஆம்புலன்ஸை மலையரசன் (27) ஓட்டினார். அவசர மருத்துவ உதவியாளர் சத்யா கர்ப்பிணிக்கு உதவியாக இருந்தார்.
அதிகாலை 4.30 மணியளவில் ஊத்திக்குளம் அருகே வந்தபோது, ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் காயமடைந்த 5 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே கர்ப்பிணி நிவேதா, அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். திருச்செல்வி, மலையரசன், சத்யா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருச்செல்வி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago