தமிழகம் முழுவதும் பரவலாக மழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் பரவலாக பல இடங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக். 21) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (அக்.20) காலை அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். 23-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24-ம் தேதி புயலாக மாறக்கூடும். 25-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் பரவலாக பல இடங்களிலும் மழை பெய்தது. தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக். 21) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகாலை முதல் மழை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை சென்ட்ரல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வளசரவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று (அக்.21) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்நிலையில் 21-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்